நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திரேந்திர சிங் (29) என்பவர் கோவில் உண்டியல் திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கின் விசாரணையை வேறு ஒரு தேதிக்கு மாற்றி நீதிபதி அருண் சங்கர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து நீதிமன்ற அறைக்கு வெளியே போலீஸ் பாதுகாப்புடன் வட மாநிலத்தைச் சேர்ந்த திரேந்திர சிங் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அப்போது திடீரென நீதிபதி இருந்த அறையை நோக்கி காலனியை கழற்றி வீசினார்.
இருப்பினும் காலனி யார் மீதும் விழவில்லை, இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில் சேரன்மகாதேவி போலீசார் திரேந்திர சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..