திபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்பத்தரர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த 2008 வெடிபொருள் விதிகள் மற்றும் 1884 வெடி பொருள் சட்டத்தின் கீழ், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ணப்பங்களை வருகிற 10.10.2025-ஆம் தேதிக்கு முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும், https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள்,

மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்களுடன் உரிய கணக்குத் தலைப்பின் கீழ் (Head of Account: 0070-Other Administrative Services 60-Other Services 109 Receipts under Expolosive Act 01 collector of District Authorities – E Challan Code No.0070 – 60- 109-AA-22738) அரசுக் கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக் கட்டணம் ரூ.500/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை (Challan) இணைக்க வேண்டும்.மேலும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் எனில், அதற்குரிய வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகைக் கட்டிடம் எனில், வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் பெறப்பட்ட பிரமாண வாக்குமூலம், விண்ணப்பதாரரின் புகைப்படம், முகவரிச்சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 10.10.2025-ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி இணையதளம் வாயிலாக விண்ண பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *