கரூர் செய்தியாளர் மரியான்பாபு

ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர்..
கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் காயமடைந்த 23 நபர்களுக்கு ரூ.15.50 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப.தலைமையில் கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரையின் நிகழ்வின் போது கூட்ட நெரிசல் காரணமாக காயமடைந்த 23 நபர்களுக்கு ரூ.15.50 இலட்சத்திற்கான காசோலைகளை செந்தில் பாலாஜி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி 27.09.2025 அன்று கூட்ட நெரிசல் காரணமாக லேசான காயமடைந்து வீடு திரும்பிய கரூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேஷ்வரி, எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த தர்ஷினி மற்றும் தீபிகா,அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி,சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல், தாந்தோணிமலையைச் சேர்ந்த பானுமதி, கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த பிரபாவதி, பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, கருப்பாயி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன், 5 ரோடு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீநிதி மற்றும் லத்திகா,வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரியாயி, அரசு காலனியைச் சேர்ந்த கிருத்திகா மற்றும் வெங்கமேடு, செங்குந்தர் நகரைச் சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட 15நபர்களுக்கு தலா ரூ. 50,000மும்,மேலும், பலத்த காயமடைந்து வீடு திரும்பிய உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த கிரிராஜ், ராயனூர் முகாமைச் சேர்ந்த கார்த்திக் (எ) சுஜித், காளியப்பனூரைச் சேர்ந்த ஶ்ரீ சரவணா, தாந்தோணிமலையைச் சேர்ந்த ஷாருக்கான், அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கீத்மாலா,வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், வெங்கமேடு, செங்குந்தர் நகரைச் சேர்ந்த ஜெயந்தி மற்றும் வெங்கமேடு, கொங்கு நகரைச் சேர்ந்த லாவண்யா உள்ளிட்ட8 நபர்களுக்கு ரூ.1 இலட்சமும் என மொத்தம் 23 நபர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.15.50 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை கரூர் சட்டமன்ற உறுப்பனர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார். அதேபோல் கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்த 28 நபர்களுக்கும், அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த 6 நபர்களுக்கும் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், துணை மேயர் ப.சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர் குமரேசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *