செய்தியாளர் சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ மோட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்
தொடர்ந்து மேய்ந்த கனமழையால் தண்ணீர் வெளியே செல்ல செல்ல வழி இன்றி அங்கேயே தேங்கி நிற்பதும் கழிவு நீர் கால்வாய் இல்லாததால்கழிவுநீரும் தேங்கி இருப்பதால் அதிலிருந்து வரக்கூடிய கொசுக்களால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் தாக்கி அவதிப்பட்டு வருகின்றனர்
ஏ மோட்டூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுங்கல் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது எனவே மருத்துவ முகாம் கிராமத்தில் அமைத்து இந்த காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
அதேபோல் இந்த கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் ஆங்காங்கே தெருக்களில் தண்ணீர் வருட கணக்கில் தேங்கி சாக்கடை போல் காட்சியளிக்கிறது பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்
பேட்டி. ஆறுமுகம்
- மீனா
- ரூபினி