எ.பி.பிரபாகரன்
பெரம்பலூர்
செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 7 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது .
பெரம்பலூர்.அக்.08. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி இன்று 08.10.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல் துறை நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் மருவத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் அலமேலு (45) த/பெ ரவிச்சந்திரன், நடுத்தெரு, ஆதனூர், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் தனக்கு சொந்தமான ரவி மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது
தெரிய வந்த நிலையில் மருவத்தூர் காவலர்கள் மேற்படி எதிரியை கைது செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் – (2.100 கிலோ கிராம்), 2.விமல் பாக்கு (3.525 கிலோ கிராம்), மற்றும் 3.V1-பான் மசாலா (1.410 கிலோ கிராம்), என மொத்தம் 7.035 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மருவத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களால் மேற்படி எதிரியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.