கடையநல்லூர்
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் நகராட்சி முத்துக்கிருஷ்ணாபுரம் வானவர் கோவில் தென் வடல் தெரு பகத்சிங்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகள் உத்ரா தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் காலை மெயின் பஜாரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு தன்னுடைய பாட்டி செல்லம்மாள் அழைத்துச் சென்ற பொழுது திடீரென வெறிநாய் ஒன்று குழந்தையின் கையை கடித்து குதறியது அப்பொழுது பாட்டி கையில் இருந்த புத்தகப் பையாள் நாயை அடித்து விரட்டினார்.
நாய் கடியினால் படுகாயம் அடைந்து வேதனையில் துடித்த 2ம் வகுப்புபள்ளி மாணவி உத்தராவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர பிரிவில் சேர்த்தனர் சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ,சுகாதார அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர் அல் அமீன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர் அதன் பின்னர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் செய்ய வேண்டுமென மருத்துவர் களை கேட்டுக் கொண்டார்.
நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடிப்பதற்கும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து அந்த நாய் தொடர்ந்து கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பர்வீன்பானு கல்லூரிக்குசென்று விட்டு திரும்பிய அப்போது மாணவியை பாய்ந்து கடித்தது அது போன்று ஒரே நாளை முத்துமாரி, கனகவல்லி,முருகேஷ், ஈஸ்வரி, , சந்திரா, தவசிராஜா, கண்ணன், மூக்கம்மாள், பஷீர், சங்கரலிங்கம், செல்லம்மாள், எஹியா, சுமையா பானு, பர்வீன்பானு. செல்லம்மாள் உட்பட16 அவர்களை வெறி நாய் துரத்தி துரத்தி கடித்தது இதில் அனைவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடையநல்லூர் நகர் பகுதியில் வெளியூர்களில் இருந்து நாய்களை பிடித்துக் கொண்டு வந்து நள்ளிரவு நேரங்களில் கடையநல்லூர் பகுதியில் விட்டு விட்டு செல்வதாக பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது கடையநல்லூர் நகர் முழுவதும் திடீரென நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத நாய்கள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் உடனடியாக வெளியூர்களில் இருந்து நாய்களை பிடித்துக் கொண்டு வந்து கடையநல்லூரில் விடும் வாகனங்களை நகராட்சி ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்தனர்
அதுபோன்று நேற்று பகல் ஒரு மணி அளவில் பெரிய பள்ளிவாசல் திடல் அருகே நின்று கொண்டிருந்த நபரை வெறி நாய் கடித்ததால் அந்த நபர் சுதாரித்துக் கொண்டதால் அவரின் வேட்டியை கடித்து இழுத்தது இது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது