பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர், பாண்டகபாடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்காக, பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்து, பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்து, பெறப்படும் மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், திருச்சி சர்வதேச விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் டி.ஆர்.சிவசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.