காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயம் மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பின் நான்காம் ஆண்டில் பயிலும் 105 மாணவர் மாணவியர்களுக்கு, ஊரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பணி அனுபவத் திட்டம் குறித்த ஆறு நாள் நோக்குநிலைப் பயிற்சி, கல்லூரி வளாகத்தில் உள்ள மாநாடு கூடத்தில் நேற்று மதியம் 2:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணிக்கு முடிவடைந்தது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர் மாணவியர்கள் கல்லூரி, சொந்த ஊர் மற்றும் வீட்டை விட்டு, ஒரு கிராமிய சூழலில் 120 நாட்கள் அங்கேயே தங்கி, விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், ஊர் தலைவர்கள், அக்ரி கிளினிக், உரக்கடை, விவசாயம் மற்றும் உபதொழில்கள் தொடர்பான ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி மையங்கள், அரசு துறைகள், தனியார் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை நேரில் அணுகி, பார்வையிட்டு, பயிற்சி பெற்று, முழுமையான பல்நோக்கு தொழில்முறை பட்டதாரியாக உருவாகும் வாய்ப்பை வழங்குகிறது.

கல்லூரி முதல்வர் முனைவர் சங்கர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசினார். இணைப் பேராசிரியர் முனைவர் ஆனந்த்குமார், அத்திட்ட ஒருங்கிணைப்பாளராக, முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், அவரவர் துறையைச் சார்ந்த தகவல்களை ஒவ்வொருவராக பகிர்ந்தனர்.

முன்னதாக, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை தலைவர் முனைவர் ராமநாதன், அதனைத் தொடர்ந்து தோட்டக்கலை துறை தலைவர் முனைவர் சாந்தி, நோயியல் துறை தலைவர் முனைவர் ஜெயலட்சுமி, பூச்சியியல் துறை தலைவர் முனைவர் குமார், உழவியல் துறை தலைவர் முனைவர் மாலா, பொருளியல் மற்றும் விரிவியல் துறை தலைவர் முனைவர் பார்த்தசாரதி, கல்வி பிரிவு பேராசிரியர் முனைவர் நடராஜன், மண்ணியல் துறை துணை பேராசிரியர் முனைவர் செல்வராஜ், மற்றும் அத்திட்ட அலுவலர்கள், மேலும் கல்லூரியின் பல துறைகளைச் சார்ந்த பாடப் பொருள் வல்லுநர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இறுதியாக , மாணவர் மித்ரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *