ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீதா ஜீவன்
தமிழக அரசு அறிவித்த திட்டமான பெற்றோரை இழந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் இன்று ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் நடத்த முடிவு செய்தார்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அழைத்து வரப்பட்டு தனியார் ஹோட்டலில் மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது இதில் குழந்தைகளுடன் அமர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் மதிய உணவு அருந்தினார்
அது குழந்தைகள் மத்தியில் மிகவும் சந்தோஷமாக இருந்தது சில மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு திமுக மகளிர் அணி நிர்வாகிகளே குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விட்டனர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தி அமைச்சருக்கு இதா ஜீவன் பின்பு அனைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுவி.இ. ரோட்டில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று 200 குழந்தைகளுக்கும் அவர்களின் விருப்பம் போல தீபாவளிக்கு ஆண் குழந்தைகளுக்கு பேண்ட் சர்ட் பெண் குழந்தைகளுக்கு சுடிதார் அவரவர் விருப்பம் போல அமைச்சர் கீதா ஜீவன் தனது சொந்த செலவில் 200 குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தார் இதோடு முடிக்காமல் குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டம் நடத்த முடிவு செய்தார்.
அதன்படி புதிய துறைமுகத்தில் உள்ள கடற்கரை பூங்காவில் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து அமைச்சருக்கு கீதா ஜீவன் தீபாவளி கொண்டாட்டம் நடத்தினார் தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடியது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது