அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்காது வாயை பொத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த மௌன புரட்சி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர் பைரவன் தலைமை தாங்கினார் கோட்ட துணைத் தலைவர் ஆசைத்தம்பி நிர்வாகிகள் உதயசூரியன் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் செவிலியர் மேம்பாட்டு சங்கம் ராகவன் சத்துணவு சங்கம் காந்தி முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார் கோரிக்கை விளக்க உரையாற்றினார்
மாவட்ட பொருளாளர் மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மேல் முறையிடினை திரும்ப பெற வேண்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்திற்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌன புரட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது