கோவை துடியலூர் பகுதியில் அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது..
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்த பகுதியில் இருக்கக்கூடிய சுமார் 18 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்..
இந்நிலையில் கோவில் உள்ள பகுதிக்கு அருகிலேயே சுமார் 300 வருடங்களுக்கு மேல் பழமையான பள்ளிவாசல் வழியாக திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் போது,மாலை பள்ளிவாசல் தொழுகை முடிந்து ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் அந்த வழியாக வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும்,இனிப்புகளையும் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
மதங்களை கடந்து மனிதநேயத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது இதில் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் அரவான் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் பொதுமக்கள்கள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்து பாராட்டி சென்றனர் ..
இந்நிகழ்வை பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் சுல்தான் மைதீன், அமீர் அப்பாஸ்,மற்றும் ஷேக் முசமில், முகமது உசேன், கமர்தீன், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ,இணைந்து கலந்து கொண்டனர்..