அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது முப்பெரும் விழா அரியலூர் சத்யா நகர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது விழா தாருல் அர்கம் பெண்கள் மதரசா துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா அரியலூர் லட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது
அரியலூர் ஆர்டிசி குழுமம் தலைவர் ஹாஜியார் எ அர் அக்பர்ஷரீஃப் விழாவிற்கு தலைமை தாங்கினார் டவுன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம் எஸ் நூர்முகமது முன்னிலை வகித்தார் நிர்வாக குழு தலைவர் எஸ் எ அஸ்கர்அலி அனைவரையும் வரவேற்று பேசினார்
மாணவர் எஸ் முகம்மது ஹாபிழ் கிராஅத் ஓதினார் நபிகள் நாயகம் பற்றி அன்வாருல் குர்ஆன் நிஸ்வான் மதரஸா மாணவிகள் நபிகள் நாயகம் பற்றி கீதம் பாடினார்கள் சென்னை அல்ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர் அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் முனைவர் டாக்டர் எம்.சதீதுத்தீன் ஃபாஜில் பாக்கவீ ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்
அரசு ஹாஜி ஷேக்இப்ராஹீம்அன்வாரி முகமது அபூபக்கர் சித்திக்தாவூதி முகமது யாசின் ஜைனீ டாக்டர் உமர்பாரூக் இர்ஷாதீ வாழ்த்துரை வழங்கினார்கள் வழக்கறிஞர் நூர்தின்ராஜா நன்றி கூறினார் பெரியார் நகர் பள்ளிவாசல் தலைவர் மீரான் முகையதீன் ராஜா லாரி சர்வீஸ் மன்சூர்அலி ஜவகர் மெடிக்கல்ஸ் ஜவகர் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்