திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது
கொரடாச்சேரி, அக்.12- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் சேகர், மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர் கீரங்குடி வேலு, பேரூராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்களும் கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்