கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபைக் கூட்டத்திற்கு கமுதி யூனியன் ஆணையாளர்
சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமண பெருமாள் மற்றும் கிராம பொது மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் குருசாமி பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானங்களை வாசித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார்,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார வட்டார இயக்க மேலாளர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்
சாதிய பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்துவிவாதிக்கப்பட்டது.
மேலும் ஊரகப் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதே போல் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழராமநதி,
கே.நெடுங்குளம், பாக்கு வெட்டி, திம்மநாதபுரம், பெருநாழி, முஷ்டகுறிச்சி,
நாராயணபுரம், பசும்பொன் உட்பட ஏராளமான ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது