பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த பால்வண்டி மீது மோதல் வீட்டின் மேற்கூறை சேதம்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் மெயின் ரோட்டில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி அதி வேகமாக சென்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பால்வண்டி மீது மோதியும் அருகில் இருந்த குமரவேல் என்பவர்கள் வீட்டின் மேற்கூரை மீது மோதி சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் டிரைவர் பயணிகள் உட்பட காயமின்றி உயிர் தப்பினார்கள்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
சம்பவம் குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து ஏற்படுத்திய பேருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர் .மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சாலை முக்கியசாலை என்பதால் சாலையின் குறுக்கே வேக தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.