தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் கிராம ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வரவு செலவு மற்றும் பணிகள் முன்னேற்ற அறிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
முன்னதாக தமிழக முதல்வர் கிராம சபை கூட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு காணொளி காட்சி வாயிலாக ஆற்றிய உரை எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.