செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் இணையதள வழியாக நேரடி உரை
காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில்
காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தமிழகத்தின் சமூக நீதிக்கான உறுதி பாட்டிற்கு ஏற்ப சமத்துவம் சமூக நீதி மற்றும் சுயமரியாதை அடிப்படையிலான ஒரு சமுகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. சாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் ஊரக பசுமை பூங்கா மேம்பாடு பணி ஒதுக்கீடு செய்ததற்கு நமது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஊராக வளர்ச்சி ஆணையர்
மாவட்ட ஆட்சியர் ஒன்றிய குழு பெருந்தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவருக்கும் பெரும்பேர்கண்டிகை ஊராட்சி மன்ற சார்பாக நன்றியினை கிராம சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மல்லிகா மணி ஊராட்சி செயலர்
ஏழுமலை உட்பட வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.