காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காங்கயம், பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் உள்ள பணியாளர்கள், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்களில் தீயணைப்பு நிலையத்துக்கு வரும் பொது மக்களுக்கு 3 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதில் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 12 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் 3 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு, காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் அழிவுகரமான தீயில் இருந்து உயிர்களையும் சொத்துக்களையம் பாதுகாப்பது குறித்தும், வெள்ளம் புயல் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மு.கார்த்திகேசன் மற்றும் தீயணைப்பு நிலைய வீர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் காங்கயம் பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.