காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பு.
பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹமீது அவுலியா தர்காவில் திரு சந்தனக்கூட உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில் திரு சந்தன கூட உற்சவம் விமர்சையாக நடைபெற்று நிறைவு விழா நடைபெற்றது
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை தர்கா தர்மகத்தா முகமது இம்தியாஸ். நிர்வாகிகள் ஹாஜி. முஸ்தபா மரைக்காயர். உமர் கான். தமிம் அன்சாரி. மற்றும் பரம்பரை பண்டாரி குடும்பம் மற்றும் தர்கா பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர் இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் மாமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.