துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஏ வி எஸ் மஹாலில் அக்டோபர் 9ந் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய உதயநிதி, தமிழகத்தில் திமுக அரசு செய்த திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துக் கூறி 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சட்டமன்ற வேட்பாளரை வெற்றி பெற செய்து மீண்டும் திமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றும் திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவால் கால் பதிக்க முடியாது என்று பேசினார்.

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை சிறப்பாக செய்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.இதில் அமைச்சர்கள் கே என் நேரு பெரம்பலூர் எம்பி கே என் அருண்நேரு, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன் ,ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் எம்எல்ஏக்கள் கதிரவன், சௌந்தரராஜன், மேயர் அன்பழகன்,மாவட்ட துணை செயலாளர்கள் சோபனபுரம் கனகராஜ், மயில்வாகனன், அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,தொகுதி பொறுப்பாளர் தங்க கமல்,நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவசரவணன், முத்துசெல்வன், அசோகன், பேரூர் கழக செயலாளர் நடராஜன், வெள்ளையன், கலை இலக்கியப் பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார்,விளையாட்ட அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், சுற்று சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி, மகளிர் அணி கிருபா, நகரத் துணைச் செயலாளர்கள் இளங்கோவன், பிரபு, தலைமை கழக பேச்சாளர் துரை பாண்டியன், பொருளாளர் சீனிவாசன், தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், நித்யா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன்,செந்தில் குமார்,மாவட்ட பிரதிநிதி மதியழகன், 18-வது வார்டு மோகன், நல்லுசாமி, சசிகுமார்,மாணவரணி துணை அமைப்பாளர் அகத்தீஸ்வரன்,சிறுபான்மையர் அணி முகமது ரபிக்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் செங்கை செந்தில்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்து துரை, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தமிழ் செல்வன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ் அழகன், மெடிக்கல் பிரேம்குமார், ரெங்கநாதபுரம் கார்த்திகேயன்,மாணவரணி பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துணை முதல்வர உதயநிதி ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *