வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 லட்சத்தில் தனியார் வங்கி பங்களிப்பு மூலமாக பழைய கழிவறை புதுப்பிக்கப்பட்டது, மாணவிகள் வரவேற்பு.
கல்வித்துறையின் நம் பள்ளி, நம் பெருமை என்ற அமைப்பின் மூலமாக பல நிறுவனங்கள் அரசு பள்ளிகளுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவி செய்து வருகின்றன.
அந்த அடிப்படையில் வலங்கைமானில் உள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையை புதுப்பித்து தருவதாக தனியார் வங்கி மூலமாக உறுதி அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் பழைய கழிவறை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்வில் வங்கியின் சீனியர் மேனேஜர் ஜான் பால் ஆரோக்கியராஜ், தஞ்சை மாவட்ட தொகுப்பு வள மேலாளர் சக்திவேல், சிஎஸ்ஆர் மேலாளர் சந்துரு ஆகியோர் பங்கேற்று கழிவறையை பள்ளி பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமை தாங்கி, திறந்து வைத்தார் , முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார், பள்ளியின் எஸ் எம் சி ஆசிரியர் பிரதிநிதி சார்லட் மேரி அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்வில் எஸ் எம் சி உறுப்பினர்கள் குலாம் மைதீன், நெடுஞ்செழியன், எஸ் எம் சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.