ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து கொண்டாடியது புதிய அனுபவம் என ரோட்டரி சங்கத்தினர் மகிழ்ச்சி கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்,பொங்கல் என அனைத்து பண்டிகைகளையும் இணைந்து ஒற்றுமையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை வடவள்ளி ரோட்டரி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இணைந்து கொண்டாடும் விதமாக ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி வடவள்ளி அனுகிரஹா கார்டன் வளாகத்தில் நடைபெற்றது..
ரோட்டரி கிளப் வடவள்ளி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக 26-27 எதிர்கால ஆளுநர் மாருதி மற்றும் கவுரவ விருந்தினராக முன்னால் துணை ஆளுநர் ராஜன் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டார்..
விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் உறுப்பினர்கள் நண்பர்கள் என அனைவரும் இணைந்து தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடினர் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது விழாவின் இறுதியில் செயலாளர் சஞ்சய் நன்றியுரை கூறினார்..