வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு அக்டோபர் 11 & 12 ஆகிய இரண்டு நாட்களில் தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை நடைபெற்றது.
இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 6 நிலையங்களில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருகாமையில் உள்ள நிலையங்களில் சென்று தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அதற்கான செயல்முறை பயிற்சி ஆகியவற்றை ஆர்வமுடன் கலந்துகொண்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பான்கள் முறையாக இயக்குவது, LPG சமையல் எரிவாயு தீ விபத்து, வாகன தீ விபத்து குறித்தும் , விபத்தில தீபாவளி செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது பற்றியும் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இந்நிகழ்ச்சியை மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமை வகித்து விழிப்புணர்வு வழங்கினார் மற்றும் இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.