திருநெல்வேலி மண்டல பண்பாட்டு மையம், தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மற்றும் ஜவகர் மன்றம் ஆகியவற்றின் ஆண்டு விழா தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு நிகழ்வாக மக்கள் மனதை எளிதில் கவர்வது இறை இசையா, அக இசையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது,
பட்டிமன்ற நடுவராக தமிழ்ச் செம்மல் பாவலர் மணி இராம. வேல்முருகன் கலந்து கொண்டு திறம்பட நடத்தினார். திரை இசையே என்ற தலைப்பின் கீழ் ஆண்டாங்கோயில் ஏவிஎஸ். திருபுவனேஸ்வரனும், மதுரை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ராஜபிரபா ஆகியோர் வாதிட்டனர், அக இசை என்ற தலைப்பில் பந்தநல்லூர் தமிழ் ஆகாஷ் மற்றும் நெய்வேலி வள்ளி பாபு ஆகியோர் வாதிட்டனர், இறுதியில் இறை இசையே மக்களை கவர்வது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஜவகர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சிகள், நாட்டிய அரங்கேற்றம், சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றன. அகில இந்திய வானொலி நிலைய கலைஞரான அக்ஷயாஹரி அவர்களின் வயலின் இசை நடைபெற்றது.
தூத்துக்குடி கல்யாண சிவாச்சாரியார் அவர்கள் வாழ்த்துரையும், தூத்துக்குடி துறைமுக மருத்துவ அதிகாரி மருத்துவர் ராஜேஸ்வரி அவர்கள் சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிவகாம செல்வி வரவேற்க, இசைப் பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.