தருமபுரி-
தருமபுரி ரோட்டரி சங்கம் சார்பில் 3-ம் ஆண்டு மது மற்றும் போதைப்பொருள் பாதிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் SAY NO TO DRUGS என்ற மாராத்தான் போட்டி நடைபெற்றுது. தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவை தனித்தனியாக தருமபுரி டிஎஸ்பி சிவராமன்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, நான்கு ரோடு, பாரதிபுரம் சென்று மீண்டும் விளையாட்டு மைதானம் வரை 5.5 கிமீ நடைபெற்றுது. இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் என 5,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள், டீ சர்ட் கள் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் முதலிடம் லோகேஸ், இரணாடாமிடம் சந்தோஷ்குமார், மூன்றாமிடம் பூவரசன் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதலிடம் கௌரி, இரண்டாமிடம் இளவரசி, மூன்றாமிடம் கொடிலா வெற்றி பெற்றனர்.
இதில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ. 4,000, மூன்றாம் பரிசு ரூ.3,000 மற்றும் இரு பிரிவிலும் 25 பேருக்கு ரொக்கம், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க கவர்னர் சிவசுந்தரம், ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டிஎன்சி மணிவண்ணன், உதவி கவர்னர் பிரதீப் குமார் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.