கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் அல்வேர்னியா மேல்நிலைப்பள்ளி அருகில் புதியதாக எல்.ஜி தீபம் மருத்துவமனையின் திறப்ப விழா
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோபிநாத் மற்றும் இணை இயக்குனர் டாக்டர்.லதா கோபிநாத் முன்னிலையில்

கோவை மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி,
கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன்,கோவை மாநகர மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் ஆகியோர் ரீபன் வெட்டி திறந்து வைத்தனர்

இங்கு நவீன மயமாக்கப்பட்ட இம் மருத்துவ மனையில்,நரம்பு இருதயம் மற்றும் அறுவை சிகிச்சை மையத்தில் 100 மருத்துவ பயனாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதி உள்ளது மேலும் அதிநவீன சிடி ஸ்கேன் 32 ஸ்லைஸ், அதி நவீன கேத் ஆய்வகம்,தீவிர சிகிச்சை பிரிவு,அவசர சிகிச்சை மருத்துவம்,அறுவை சிகிச்சை மையம்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும்  மின் அணு எக்ஸ்ரே வசதி போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன இங்கே மருத்துவ பயனாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது,

நிகழ்வில் கட்சி பிரமுகர்கள் கோவை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *