பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதானூரைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி செல்வதற்கு ஏதுவாக பேருந்து இயக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குன்னம் போக்குவரத்து பணிமனையில் இருந்து ஆதனூர் வழியாக திருச்சி செல்லும் வகையிலான புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்து சேவையினை ஆதனூரில் இன்று (12.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் தொடங்கி வைத்தார்
இப்பேருந்தானது தினந்தோறும் காலை 6.45 மணிக்கு குன்னம் போக்குவரத்து பணிமனையில் இருந்து குன்னம்,பெரியம்மாபாளையம், ஆதனூர், கூடலூர், கொளக்காத்தம் வழியாக திருச்சி வரை இயக்கப்படும்.இப்பேருந்து சேவை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும், பிற பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், ஆலத்தூர் முன்னாள் ஒன்றியப்பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் ஜெகதீசன்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் லிட் மேலாண்மை இயக்குநர் தசரதன், திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.