பெரம்பலூர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை, உழவர் சந்தை அருகில் அருள்மிகு மதினகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.

‌. தமிழ்நாடு முதலமைச்சர் 2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டப்படும் என்று அறிவித்தர்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ந.மிருணாளினி , பெரம்பலுர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உதவி ஆணையர் அலுவலகம் கட்ட உள்ள இடத்தைப் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறையின் திருச்சிராப்பள்ளி மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன்,
அறங்காவலர் குழுத்தலைவர் ஆ.கலியபெருமாள், அட்மா தலைவர் .வீ.ஜெகதீசன்,பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, அரங்காவலர் உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சண்முகம், . கோகிலா, உதவி பொறியாளர் வடிவேல், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *