கம்பம் நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்ற நகர் மன்ற தலைவர் அமைச்சர் சந்திப்பு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நகர்மன்ற கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது
இதில் நகர் மன்றத்தில் உள்ள 33 நகர் மன்ற உறுப்பினர்களில் தலைவர் துணைத் தலைவர் தவிர 27 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க வேண்டும் ஆனால் அதிமுக திமுக என மொத்தம் 19 கவுன்சிலர்கள் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்தனர்
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என்று நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் அறிவித்தார் இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்ற நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் மற்றும் நகர் மன்ற கவுன்சிலர்கள் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜ.பெரியசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் .