கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் கோடந்தூர் கிராம பகுதி மக்கள் தனியார்க்கு சொந்தமான உயிர் மின்னழுத்த மின் கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதி கருக்கம்பாளையம் பிரிவு முதல் வண்டாரிபாளையம் ஊர் வழியாக திருப்பூர் மாவட்ட எல்லை வரை பஞ்சாயத்து இட்டேரி கைப்பாதை 4 கி.மீ. வரை உயர்மின்னழுத்த மின்கம்பங்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் உயர்மின்னழுத்த பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக மின்கம்பங்களை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, மாற்று வழிகள் மூலம் மின்கம்பங்களை அமைக்க கோருதல்-சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..
எங்கள் கிராமப் பகுதியில் அரவக்குறிச்சி வட்டம் கோடந்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மேற்படி ஊர்களில் பஞ்சாயத்துக்கு சொந்தமான (கோடந்தூர் வடக்கு புல 5:471,484 បុល : 520, 521, 525, 526.545/A, 546, 557,558,570) பாதைக்கு அருகில் எங்களுக்கு சொந்தமான பட்டா இடங்களில் வீடு கட்டி வசித்து வருகிறோம். மேற்படி புல எண்களில் உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்அனுமதி வழங்க உள்ளதாக கேள்விபட்டோம்.
ஊரில் பல்வேறு விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மேற்படி இட்டேரி கைப்பாதை வழியாக கால்நடைகளை மேய்ச்சலுக்கும், விவசாய பொருட்களான வைக்கோல், சோளத்தட்டை போன்றவற்றை டிராக்டர் மற்றும் லாரிகள் மூலமாக எடுத்து சென்று வருகிறோம். மேற்படி இட்டேரி கைப்பாதையானது குறுகிய அகலம் கொண்டதாக இருப்பதனால் ஒரு வாகனம் செல்வதே சிரமமாக உள்ளது. இந்நிலையில் இவ்விடத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பங்களை JSW PVT LTD நிறுவனம் அமைப்பதற்கு பஞ்சாயத்து அனுமதி வழங்கி உள்ளது.உயர் மின்னழுத்த மின்கம்பங்களை அமைக்கும் பட்சத்தில் மேற்படி இட்டேரி கைப்பாதையை எங்களால் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.
மேற்படி உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் அமைப்பதனால் எங்கள் ஊர் பொது மக்களுக்கு அன்றாட விவசாய மற்றும் போக்குவரத்து பணிகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருக்கும். மேலும் எங்கள் பகுதி சுற்றுசுழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பல்வேறு அச்சுறுத்தல் ஏற்படுவதால் விவசாய பணிகளும் பாதிக்கப்படுகிறது மேலும் எங்கள் ஊர் கோயில் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் அமைவதால் திருவிழா காலங்களில் தேர்மற்றும் சுப நிகழ்ச்சிகளும் வான வேடிக்கைகளையும் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே ஊர் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தும் வண்ணம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கோடந்தூர் கிராமம் கருக்கம்பாளையம் பிரிவு முதல் வண்டாரிபாளையம் ஊர் வழியாக திருப்பூர் மாவட்ட எல்லை வரை பஞ்சாயத்து இட்டேரி கைப்பாதையை 4 கி.மீ வரை உயர் மின்னழுத்தம் அமைப்பதை தடை செய்து அவ்வாறு உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து மாற்று வழியில் மின்கம்பங்களை அமைக்க நடவடிக்ககை மேற்கொள்ளும் படி ஊர் பொது மக்கள் சார்பாக வேண்டுகிறோம்.என்று மனு அளித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.