பெரம்பலூர்.அக்.13. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையினை தலமையிடமாகக் கொண்டு ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கோரிக்கை வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, 29.4.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வேப்பந்தட்டை வட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு ரூ. 233.60 லட்சம் மதிப்பில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ந. மிருணாளினி தலைமையில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, முன்னிலையில் பொம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிராபகரன் திறந்து வைத்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 02 தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் உள்ளது. தற்போது கூடுதலாக இந்த தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலகம் திறத்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நிலைய அலுவலர், இரண்டு முன்னணி தீயணைப்பாளர்கள், மூன்று எந்திர கம்மியர் ஓட்டுநர்கள், 11 தீயணைப்பாளர்கள் என மொத்தம் 17 புதிய பணியிடங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தீயணைப்பு நிலையத்தில் ஒரு நீர்தாங்கி வாகனம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளுக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
எசனையிலிருந்து பில்லாங்குளம் வரையிலான 43-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் பயபெறும் வகையில் இந்த தீயணைப்பு நிலையம் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கள் பகுதிக்கு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணை இயக்குநர் முரளி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை அலுவலர் அனுசுயா, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், மாவட்ட உதவி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை அலுவலர் வீரபாகு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.