தூத்துக்குடி மாநகரில் நேற்று முன் தினம் இரவு நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்தது நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது பல இடங்களில் மழை நீர் தானாகவே கடலுக்கு சென்றது இந்த நிலையில் 3ம்னமல் பகுதியில் மழைநீர் செல்லாமல் அப்படியே தேங்கியிருந்தது மேலும் கழிவு நீர் கான்களில் நீ திரும்பி செல்லும் நிலையில் இருந்தது
இதனால் அப்பகுதியில் மாலை நேரம் அப்படியே இருந்தது எடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாம் னமல் பகுதியில் ஏன் மழை நீர் செல்லாமல் தேங்கி உள்ளது என்று தொடர்ந்து பார்வையிட்டு வந்ததில் பாலிடெக்னிக் எதிர்புறம் உள்ள பிரபல ஹோட்டல் இறைச்சி கழிவுகள் மேலும் செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுநீர் கானில் விடப்பட்டது
அதன் மூலம் சுமார் 30 அடி நீளத்துக்கு கழிவு நீர் கான் அடைப்பு ஏற்பட்டுள்ளது இதனை பார்வையிட்ட மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் உத்தரவின் பெயரில் நகர் நலஅலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர் பணியாளர்கள் கழிவுநீர் கான் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் பிளேட்டை அகற்றி பார்த்த போது மனித கழிவுகள் இறைச்சி கழிவுகள் அப்படியே தேங்கி பாறை போல உறைந்திருந்தது
இது சுமார் 30 அடி நீளத்துக்கு இருந்ததால் எந்த ஒரு தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை இருந்துள்ளது இதனை அடுத்து உடனடியாக 30 அடி நீளத்துக்கு கழிவுநீர் கான் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் பிளேட் எடுக்கப்பட்டு காணுக்கள் தேங்கி இருந்த பாறை போல கழிவுகளை சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு அள்ளப்பட்டது சுமார் ஒரு லாரிக்கு மேல் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது
உடனடியாக தனியார் ஹோட்டல் நிறுவனத்திற்கு 25000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபட்டால் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் உயர்த்துள்ளனர் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் ஒரு கையில் தூத்துக்குடி மாநகரிலுள்ள தனியார் திருமண மண்டபங்கள் பிரபல ஹோட்டல்கள் மனித கழிவு இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கான்களில் விடக்கூடாது மிறி விடப்பட்டால் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதுபோல தூத்துக்குடி மாநகரில் பல திருமண மண்டபங்கள் பல பிரபல ஹோட்டல்கள் தங்களுடைய கழிவுகளை கான் கழிள்களில் தான் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது மாநகராட்சி நிர்வாகம் இதன் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது ஆகையால் மாநகரில் திருமண மண்டபங்கள் ஹோட்டல்கள் கழிநீர்கான்களில் மனித கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை விடப்பட்டிருந்தால் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிய வருகிறது