குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூரில் 1972 ல் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

அன்றைய தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, 1972-ம் ஆண்டு தமிழக காவல் துறையில், காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் 50 பேர் உதவி ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று தற்போது 75 வயதில் உள்ளனர்.
அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது வடலூரில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஓய்வு உதவி ஆய்வாளர் வீரமணி தலைமை தாங்கினார். ஞானப்பிரகாசம், நாராயண பிள்ளை, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், மணி, துரைராஜ், ராமசாமி, சுந்தரமூர்த்தி, லட்சுமணன்,ஜெயக்குமார், துரைமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முனுசாமி நன்றி கூறினார்.