பஹ்ரைனில் நடைபெற உள்ள ஏசியன் யூத் கேம்ஸ் தொடர் டெக் பால் போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் இருவர் பங்கேற்பு
கோவையில் இருந்து டில்லி வழியாக பஹ்ரைன் செல்லும் டெக் பால் இந்திய அணியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,பப்புவா நியூகினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்
பஹ்ரைனில் வரும் அக்டோபர் 22 முதல் 31 வரை மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த போட்டித் தொடரில் நடைபெற உள்ள டெக்பால் விளையாட்டு போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது..
இதில் தமிழகத்தை சேர்ந்த ரக்ஷனா,மஹா வித்யா ஆகிய இரு மாணவிகள் இந்திய அணியில் பங்கு பெற்றுள்ள நிலையில்,இந்திய அணி வீர்ர்களுக்கான பயிற்சி முகாம் தமிழக டெக்பால் சங்கத்தினர் சார்பாக கடந்த பதினைந்து நாட்களாக நாமக்கல் கே.எஸ்.ஆர்.கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது..
இந்நிலையில் பயிற்சி முடித்த இந்திய அணியினர் பஹ்ரைன் நாட்டில் நடைபெறும் ஏசியன் யூத் கேம்ஸ் தொடரில் கலந்து கொள்ள செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தனர்..
விமான நிலையத்தில் தமிழக வீராங்கனைகளான கடலூரை சேர்ந்த ரக்சனா மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மஹா வித்யா உட்பட இந்திய அணி வீரர்,வீராங்கனைகளை தமிழக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின், இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்..
முன்னதாக டெக்பால் இந்திய அணியில் விளையாட உள்ள தமிழக வீராங்கனைகள் கூறுகையில் டெக்பால் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளதாகவும்,நடைபெற உள்ள ஏசியன் யூத் கேம் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
முன்னதாக வழியனுப்பு விழாவில் தமிழ்நாடு டெக்பால் தலைவர் மோதிலால் மற்றும் நிர்வாகிகள் சித்தேஸ்வரன்,பரணிதரன் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..