குற்றாலம் பகுதியில் தொடரும் கன மழை அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் – குளிக்க தடை
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தொடர்ந்து கனமழை பெய்துவரும் கனமழையினால்
குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காண்போரை அச்சுறுத்தும் வகையில் காற்றாற்று வெள்ளமாக தண்ணீர் விழுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மட்டுமல்ல அருவிகளில் பக்கம் நெருங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன் படி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரி யாத அளவிற்கு வெளிச்சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டடன. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் காற்றாற்று வெள்ளம் போல் தண்ணீர் விழுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கபோலீசார் தடை விதித்தனர்.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குறிப்பாக தென்காசி-திருநெல்வேலி சாலையில் குருநாத வைத்திய சாலையிலும், நகராட்சி அலுவலகம் முன்பாகவும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கும் அள விற்குதண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.