மதுரை, டாக்டர். டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் தீபாவளி புத்தாடை வழங்கும் விழா கொண்டாடப் பட்டது. மாணவர் மன்றத் தலைவர் செல்வி பூஜா தலைமை தாங்கினார். மாணவர் மன்றச் செயலாளர் செல்வன் முகமது உமர் அனைவரையும் வரவேற்றார்.
மாணவர் மன்ற இணைச் செயலாளர் ஹர்சித் ராஜ் பாதுகாப்பான, தீபாவளி உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சிறப்புரை ஆற்றிய தலைமை யாசிரியர் சரவணன் பேசும் போது, “பாதுகாப்பான மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும். பெரியவர்கள் துணையுடன் வெடிகளை வெடிக்கவும். வறுமை அகற்றிட, உலகில் அமைதி உண்டாக , போர் அற்ற உலகம் அமைந்திட இத்தீபாவளி வெளிச்சம் தரட்டும் ” என்று வாழ்த்தினார்.
ஆசிரியர் பாக்கியலெட்சுமி ‘யெல்லோ போக்’ ( yellow bag) நிறுவனம் வழங்கிய புத்தாடைகளை மாணவர்களுக்கு வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் கீதா, செய்திருந்தார். மாணவர் மன்ற துணைத் தலைவர் செல்வி தமினா நன்றி கூறினார்.