அரியலூர் வாலாஜா நகரம் ஊராட்சி புதிய மார்க்கெட் தெரு மற்றும் பாரதியார் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அந்த பகுதியில் வசிக்கும் ஏழு தெருக்களிலும் வசிக்கும் பொதுமக்கள் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் முருகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

அதில் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள ஏழு தெருக்களிலும் முறையான கழிவு நீர் வாய்க்கால்கள் இல்லாமல் மழை நீரும் கழிவு நீரும் கலந்து சாலையில் குளம் போல் காட்சியளிக்கிறது இங்கு வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர்

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் சேதமடைந்து உள்ளன புதிய சாலைகள் அமைக்க வேண்டும் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வசிக்கின்றனர் புதிய மார்க்கெட் தெரு இணைப்பு சாலை ரிதன்யா மண்டபம் துவங்கி புறவழிச்சாலை அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைகிறது

இந்த சாலை சேதமடைந்து உள்ளது இவைகளை உடனே சரி செய்ய வேண்டும் மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிற்கிறது இதை சரி செய்து தர வேண்டி சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் சங்கத்தின் தலைவர் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் செயலாளர் ராமராஜன் பொருளாளர் முருகன் துணைத்தலைவர் இளங்கோவன் மகளிர் அணி துணைத்தலைவர்கள் சுமதிசாமிதுரை வெண்ணிலா திருஞானம் செல்வராஜ் தேவராஜ் சுஜிதா பேகம் தண்டபாணி கட்டபொம்மன் பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *