கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் பள்ளி மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளி மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் பள்ளி மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் தலைவர் பிராங்க் டேவிட்,இயக்குனர் மார்கரெட் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணை தாளாளர் அபிஷேக் ஜாக்சன் மற்றும் கிறிஸ்ஸி அபிஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் மதிவாணன் கலந்து கொண்டு, வெவ்வேறு துறைகளில் மாணவர்களுக்கு மாணவர் தலைவர், துணைத் தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து அதற்கான கொடிகளையும் அணிவித்தார்.
லாரல் மெட்ரிக் பள்ளி மாணவ தலைவராக ஜோஷ்வா செல்வராஜ், துணைத் தலைவராக மாணவி லாவண்யா ஆகியோர் பதவியேற்றனர்.பெங்கலன் பப்ளிக் பள்ளி மாணவர் தலைவராக கிளாட்சன் ஜபேஸ்,தலைவியாக கவின் வேதா ஆகியோர் பதவி ஏற்றனர்..
மேலும், மாணவர்களின் பல்வேறு வகையான திறமைகளை வளர்க்கக் கூடிய லாரல் பள்ளியின் ஆலிவ்க்ரீன்,ரெட்ரோஸ்,ப்ளு பெல்ஸ், லில்லி வொயிட் மற்றும் பெங்கலன் பப்ளிக் பள்ளியின் ஆல்பா,பீட்டா,காமா,ஒமேகா ஆகிய கிளப் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு பதக்கங்களையும், கொடிகளையும் வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசினார்.
தொடர்ந்து பள்ளியில் செயல்பட்டு வரும் குட்டி காப்ஸ்,மற்றும் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மாணவர்களை பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் இறுதியாக பாதுகாப்பான சாலை பயணம்,சாலை விதிமுறைகளை பின்பற்றுவது,ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது