வலங்கைமானில் நடைப் பெற்ற ஓய்வூதியர் சங்க
வட்ட பேரவை கூட்டத்தில்தொகுப்பூதியம் பெற்று
ஒய்வு பெற்ற அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்
நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டம் வட்டத் தலைவர் எஸ். புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்றது. பி. ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். வேலை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை படித்து ஊழியர்களிடம் வட்ட செயலாளர் சண்முகம் ஒப்புதல் பெற்றார்.

வட்டபேரவையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணைச் செயலாளர் புவனேஸ்வரி அங்கன்வாடி ஊழியர்கள்சங்க மாவட்ட செயலாளர் பிரேமா,முன்னாள் தலைமை ஆசிரியர் புலவர் சிவ. செல்லையன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் தெய்வ. பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் எம். சண்முகம் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வட்ட தலைவர் கே. பால
சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. வட்ட தலைவர் எஸ். புஷ்பநாதன், வட்ட செயலாளர் ஏ. சண்முகம், பொருளாளர் பி. ஜெயராமன், வட்ட துணைத் தலைவர்கள்
தெய்வ. பாஸ்கரன் , எம். சண்முகம், வட்ட இணைச்
செயலாளர்கள் டி. அமிர்தகணேசன், கே. கிருஷ்ண
மூர்த்தி, எம். கலையரசி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராஜசுலோச்சனா, தணிக்கையாளர் கே. விஜயா ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப் பட்டார்கள்.

வட்ட பேரவையின் தீர்மானங்கள் தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தல், 70 வயதில் 10சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், ஒய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்று ஒய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டுதல், 21மாதமாக விட்டு விட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குதல், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் தீர்வு செய்யப்படாத பட்டியல்களையும், கொரோன கால நிலுவை பட்டியல்களையும் தீர்வு செய்து அனைவருக்கும் வாரிசு
களுடன் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்குதல், ஒய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், மற்றும் உதவியாளர்களுக்கு மாத கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் வழங்குதல், மாவட்ட ஆட்சியர் தலைமையில்
மூன்று மாதங்களுக்குஒரு முறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தினை நடத்தி நிலுவை இனங்கள் மீது விரைவு நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வட்ட இணைச் செயலாளர் எம். கலையரசி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *