கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சுமார் 61 மையங்கள் செயல்பட உள்ளது
இந்நிலையில் அம்மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்கள் 61 பேர்களுடன் பணிகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதற்கான கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகர அமைப்பாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, சத்துணவு அலுவலர் தினேஷ், சமுதாய ஒருங்கிணைப்பாளர் ராதா, டெய்சி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பணியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது