ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
“திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கோலகலமாக துவங்கியது”.
தமிழ்நாடு நாள் விழா தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நாள் விழா குறித்த வரலாறு தொடர்பான சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ வைத்தார்கள்.
திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நாள் விழா குறித்த வரலாறு தொடர்பான சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க நடப்பு ஆண்டில் தமிழ்நாடு நாள் விழாவினை மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறியும் வண்ணமும், மேலும் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ, மாணவியர்களை கொண்டு பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தவும், பொதுமக்கள் அதிகமாக கூடும் பிரதான இடங்களில் சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை அமைத்திடவும் உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் வ.சோ ஆண்கள், ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் கஸ்துரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பேரணியானது புதிய இரயில் நிலையத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
பேரணியானது, புதிய இரயில் நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தினை சென்றடைந்தது.
அதனைத்தொடர்ந்து, திருவாரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு நாள் விழா குறித்த வரலாறு தொடர்பான சிறப்பு புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு குறித்த நிலவியல் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதனை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழ்நாடு நாள் விழா குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும், சமூக நலத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகள் ஏந்தி வரப்பெற்றது. மேலும், இக்கண்காட்சியினை 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்து அறிந்து கொண்டனர்.
இப்புகைப்படக்கண்காட்சியானது 23ம் தேதி வரை திருவாரூர் நகராட்சி அலுவலக வளாக்தில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாது பார்வையிட்டு பயன்பெற வேண்டும்.
நிகழ்வில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் .சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் கனகலெட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் .கார்த்திகா, திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வி நாராயணன் திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், திருவாரூர் நகராட்சி மேலாளர் முத்துகுமார் பொறியாளர் ஐயப்பன் நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், .செந்தில், சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்