பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு சொற்பொழிவு விழா
பொன்னேரியில் ராஜஸ்தானியர்களுக்கு உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த பூஜ்யஸ்ரீ வெங்கடேஷ் பாய்ஜி தலைமையில் பகவத் கீதை சொற்பொழிவு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதியில் உள்ள என் வி ஆர் திருமண மண்டபத்தில் ராஜஸ்தா னிர்களுக்கு ஆடி மாத பகவத் கீதை சொற்பொழிவு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியை ச் சேர்ந்த பூஜியஸ்ரீவெங்கடேஷ் பாய்ஜி என்பவர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இச்சொற்பொழிவில் சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சேர்ந்த ராஜஸ்தானியர் கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இச்சொற்பொழிவானது 18ந் தேதி முதல் 24ந்தேதி வரை 7தினங்களு க்கு தொடர்ந்து நடை பெறுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ராஜஸ்தானிய பெண் கள் 108 கலசங்கள் பால்குடங்களு டன் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர் இந்நிகழ்ச்சியில் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 800க்கு மேற்பட்ட ஆண் பெண் ராஜஸ்தா னியர்கள் கலந்து கொண்டனர்.