திருவள்ளூர்
பொன்னேரியில் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கொக்கு மேடு பகுதி யில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு திருவ ள்ளூர் மாவட்டம் சார்பில் கட்டு மான தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளான ஓய்வூதியம் 3ஆயிரம் மாக வழங்கு, பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொ கை வழங்கு,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்து பொன்னேரி குக்கு மேடு பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் எம் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் பி. குமார், மாவட்ட தலைவர் கே விஜயன், உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றி னர்.
முடிவின் தொழிலாளர் நல வாரிய ஆணையாளர் வரதராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிர்வாகி சொர்ணமாலா நன்றி கூறினார்.