ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கண்காணிப்புக்குழு துணைத்தலைவர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க மாரிமுத்து தலையாமங்கலம் ஜி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம் ஊரகம் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், சான்சாத் ஆதர்ஸ் கிராம் யோஜனா கிராம வளர்ச்சித் திட்டம் முன்னேற்ற விபரம், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம் ஜல்ஜீவன் மிஷன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராம மின்னொளி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி நான் முதல்வன் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தூய்மை இந்தியா திட்டம், தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுத்திட்டம், ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம், ஜனனி சுரக்ஷா யோஜனா டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டம் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஸ்தரா அபியான் திட்டம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலப்பதிவுருக்கள் கணினிப்படுத்தும் பணி நில. அளவைப்பதிவேடுகள் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகம் குறித்தும் துறைவாரியாக கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முதல்நிலை அரசு அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டு, திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உரிய. நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான நடைமுறைகளை சாதாரண. மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் முழுமையாக கிடைக்கின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்பகுதிகளில் குடிநீர் வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்ற வகையில் திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களால் அறிவுறுத்தப்பட்டது ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் .சந்திரா வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா மன்னார்குடி செல்வி கீர்த்தனா மணி மகளிர் திட்ட அலுவலர் சிவ வடிவேல் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் ஒன்றியக்குழு தலைவர்கள் நகர மன்றத் தலைவர்கள் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்