பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
அய்யம்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ வைப்பு..
தீ வைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே வடக்குமாங்குடி வெள்ளாலத் தெருவில் வசித்து வருபவர் அப்துல் மஜீத். இவர் துபாயில் பணி புரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக, துபாயில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான வடக்கு மாங்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைலோ கார் தீயில் எரிந்து கொண்டிருப்பதாக உறவினர்கள் அப்துல் மஜீத்திற்கு போன் செய்தனர்.
தீயில் எரிந்த காரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டில் உள்ளவர்கள் தண்ணீரால் அனைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது மேலும் கார் தீ பற்றி எரிந்ததால் வீட்டின் சில பகுதிகளும் சேதம் ஏற்பட்ட்டது.
தகவல் அறிந்த பாபநாசம் (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு தீயிட்டு கொளுத்தப்பட்ட காரை பார்வையிட்டு காரை கொளுத்திய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தீயில் எறிந்த இதே கார் இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஒரு முறை கொளுத்தப்பட்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் இருந்த நிலையில் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.