எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக சாலை பழுது.ஜல்லி கற்களை கடந்து அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்.விரைந்து சீரமைக்க அரசுக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பயிற்றுநர் தேர்வு வளாகத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
இந்நிலையில் கட்டிடம் திறப்பு விழாவின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட கருங்கல் சாலையே தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இருசக்கர வாகனங்கள் தொடங்கிய கனரக வாகனங்கள் வரை நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு இச்சாலை வழியே வந்து செல்வதால் சாலை பழுதடைந்து ஜல்லி கற்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.
இதனால் பிரதான சாலையில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரையிலான சாலையை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.ஜல்லி கற்களில் வாகனத்தை இயக்கும் போது தடுமாறி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
எனவே சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவக சாலையை சீரமைத்து புதுப்பிக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.