மருத்துவ குணம் நிறைந்தது, புற்றுநோயை தடுக்கும் கருப்பு கவுனி அரிசி மதிப்பு கூட்டுவதால் அதிக பெறலாம்.
பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றான கருப்பு கவுனியின் மருத்துவ குணம் புற்றுநோயை தடுக்கிறது. இன்சுலினை
சுரக்க வைக்கிறது. இதனை மதிப்பு கூட்டி விற்கப்படுவதால் அதிக லாபம் பெறலாம் என ஈஷா மண் காப்போம் அமைப்பினை தெரிவித்துள்ளது.
கருப்புக்கவுனி என்றழைக்கப்படும் நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படும் தற்போது தமிழகத்தில் இதன் மருத்துவ குணத்திற்காக பரவலாக பயிரிடப்படுகிறது.
சுமார்145-160 நாட்கள் எடுத்துக் கொண்டு வளரும் இந்த பாரம்பரிய நெல் நீர் குறைந்த மற்றும் உலர் நிலங்களிலும், கரிசல் மற்றும் செம்மண் போன்ற நிலப்பகுதிகளில் செழித்து வளரக்கூடிய நெல் ரகமாகும்.இதன் மருத்துவ குணம் புற்றுநோயை தடுக்கிறது.
இன்சுலினை சுரக்க வைக்கிறது. பண்டைய அரசர்கள் மட்டுமே சாப்பிட்ட இந்த அரிசி உணவானது எல்லோராலும் இன்று ஜஸ்கிரீம், கஞ்சி, அல்வா,இனிப்பு பொங்கல், பாயாசம், தோசை போன்ற உணவு பதார்த்தமாக மக்களிடையே வலம் வருகிறது. இயற்கை முறை விவசாயிகளுக்கு இதில் அதிக மகசூல் மட்டுமல்லாமல் மேலும், இதனை உணவு பொருளாக மதிப்பு கூட்டுவதால் அதிக லாபமும் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.