கோவையில் போட்டோ கிராபி மற்றும் 3 டி வகை நவீன தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வரும் மாக் அகாடமி இந்துஸ்தான் கல்லூரியில் தனது விரிவுபடுத்தப்பட்ட புதிய பிளாக்கை துவக்கியது..இதன் மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மையம் என்ற பெருமையை கோவை மாக் அகாடமி பெற்றுள்ளது…

ஜே.டி கல்வி நிறுவனம் மற்றும் பயற்சி மையம் மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக் (MAAC) உடன் இணைந்து கோவை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் கிளை மையங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து வருகிறது.

நவீன தொழில் நுட்பம் சார்ந்த குறும்படம் இயக்கம்,டிஜிட்டல் ஓவியம்,ஃபோட்டோ கிராபியின் நவீன தொழில் நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நடத்தி வரும் இம்மையம் விரிவுபடுத்தப்பட்ட புதிய வளாகத்தை துவக்கியது. இதற்கான விழா மாக் பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி சம்ஜித் தனராஜன் ,மற்றும் கோத்தகிரி புனித ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி,செயலாளர் பிரியா, ,கல்லூரி முதல்வர் பொன்னுசாமி , ஆகியோர் கலந்து கொண்டு புதிய விரிவுபடுத்தப்பட்ட பிளாக்கை திறந்து வைத்தனர்..இதில் மூன்று ஸ்டுடியோக்கள்,90 பேர் அமரும் வகையில் ஒரு வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மாக் அகாடமியின் மிகப்பெரிய பயிற்சி மையமாக இந்துஸ்தான் கல்லூரியில் செயல்பட்டு வரும் இந்த மையம் இருப்பதாக மாக் அகாடமியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *