பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவியர்களுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பள்ளி கல்வித்துறை & அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 2022- 2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு படித்த மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
இதில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கல்வி அலுவலர் சு.ஜெயா தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் அரியலூர் கோட்டாட்சியரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன்,மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர்,ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன்,மாவட்ட கல்வி அலுவலர்கள்(பொ) மோகன் (தனியார் பள்ளி), பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெ.முத்தையன் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜமாணிக்கம்,மீனாட்சி நடராஜன்,வெற்றிவேலன், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.