வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி விதைத்த சில நாட்களிலேயே பருவம் தவறி பெய்த மழையால்,
தற்போது உரிய மகசூல் தராமலேயே முடிவு நிலைக்கு வந்த பருத்தி செடிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு 8,950 எக்டரில் சம்பாவும், சுமார் 4000 எக்டேரில் குறுவை அறுவடைக்கு பின் மேற் கொள்ளக்கூடிய தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
நெல் அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக வலங்கைமான் மற்றும் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஆண்டை விட கூடுதலாக சுமார் 8,250ஏக்கரில் பருத்தி சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்திற்கு கூடுதல் விலை கிடைத்தது.
மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுவதால் பருத்தி சாகுபடி இந்த ஆண்டு கூடுதலாக நடைப்பெற்றது.
கடந்த ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்வதற்காக விதைக்கும் பணி மேற்க்கொள்ளும் வகையில் போதிய இடை வெளியில் சிறிய அளவிலான பாத்திகள் அமைத்து பருத்தி விதையை விதைத்து வந்தனர்.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயலில் புழதி உழவு செய்தும், சில இடங்களில் சேற்று உழவு செய்தும் பின்னர் பருத்தி விதையை விதைத்தனர்.
இதுபோல விதைப்பதால்செடிகளின் வளர்ச்சி வேகம் அதிகம் இருப்பதாகவும், முளைப்புத் திறன் கூடுதலாக உள்ளதாகவும், களை நிர்வாகம் போன்றவற்றிற்கு ஆகும் செலவு குறைவாகவும் இருப்பதால் உழவு செய்து பருத்தி விதைகளை விதைக்கும் நடைமுறையினை மேற்
கொண்டனர்.
வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாககோடை மழை பருவமழை போன்று பெய்தது. அதன் காரணமாக பருத்தி செடிகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. பொதுவாக பருத்தி சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவை இல்லை, ஈரப்பதமே போதுமானது.
இருவித்திலைத் தாவரமான பருத்தி செடிகளை சுற்றி இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் பருத்தி செடிகள் வாடல் நோயால் பாதிக்கப்பட்டது.
பருத்திவிதைத்த நாள் முதல் 60நாட்கள் வரை பருத்தியின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். அக்கால கட்டங்களில் பெய்த மழைகளின் காரணமாக பருத்திக்கு உரிய நேரத்தில் உர நிர்வாகம்,களை நிர்வாகம், பூச்சி மருந்து நிர்வாகம் உள்ளிட்டவைகளை விவசாயிகளால் மேற்க்
கொள்ள இயலாமல் போனது அதனையடுத்து வீராணம் உள்ளிட்ட சில இடங்களில் பருத்தி செடிகள் உழவு செய்யப் பட்டு முன்பட்ட குறுவை நடவு மேற்கொள்ளப்பட்டது.
பல இடங்களில் பருத்தி செடிகளை களைகள் முழுமையாக ஆக்கிரமித் ததால் களகளை நீக்குவது விவசாயிகளுக்கு பெரும்சவாலாக இருந்தது. அதனையடுத்து வழக்கத்தை விட பருத்திவிவசாயிகளுக்கு செலவிட்டுத்தொகை இரு மடங்கானது.
சாகுபடி செய்யப்பட்ட மொத்த பரப்பளவில் பாதி அளவிற்கு செடிகள் வாடல் நோயால் பாதிக்கப்பட்டும் செலவிட்டுத்தொகை இரட்டிப்பான நிலையில் உரிய மகசூல் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுகள் வரை ஏக்கர்
ஒன்றுக்கு அதிகபட்சமாக 15குவிண்டால் பருத்தியும் குறைந்த பட்சமாக 9குவிண்டால் பருத்தியும் சராசரியாக 12குவிண்டால் பருத்தி மகசூல் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு சில பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு மூன்று குவிண்டால்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு 6குவிண்டால்மட்டுமே மகசூலாக கிடைத்துள்ளது. அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் மட்டுமே ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 9குவிண்டால் அளவுக்கு பருத்தி கிடைத்துள்ளது. இந்நிலையில் பல இடங்களில் பருத்தி உரிய மகசூல்களை விவசாயிகளுக்கு தராம லேயே முடிவு நிலை எட்டிஉள்ளதால் பருத்தி விவசாயிகள் வேதனை
அடைந்துள்ளனர்.
நடப்புஆண்டில் பருத்திற்கு வழக்கத்தை விட கூடுதலாக செலவு செய்த நிலையில் மகசூழம் விலையும் பாதியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.